இடுப்பு, முதுகை வலுப்படுத்தும் பாதஹஸ்தாசனம்..!

0
115
இடுப்பு, முதுகை வலுப்படுத்தும் பாதஹஸ்தாசனம்..!
Advertisement
Advertisement

இந்த ஆசனம் செய்வதால் கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும்.

முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும்.

செய்முறை :

விரிப்பில் நேராக நிமிர்ந்து நின்று கைகளை உயர தூக்கவும். மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து கால் பாதத்தை தொடவும். பின் மெல்ல தலையை காலுடன் ஒட்டியவாறு சேர்த்து வைக்கவும்.

இந்த நிலையில் முடிந்த அளவு இருந்த பின் மூச்சை மெல்ல வெளியேற்றியவாறே தலையை நிமிர்த்தவும்.

பயன்கள் : 

தலைக்கு ரத்தம் பாய்வதால் சிரசாசனம் செய்த பலனை இந்த ஆசனம் கொடுக்கும்.

கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப்பெறும்.

முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது.