அழகு, ஆரோக்கியம், இயற்கை, அழைக்கிறார் டாக்டர் சாருமதி…..! பகுதி – 6

Herbal & Ayurvedic Products

0
266
Advertisement
Advertisement

அழகு,ஆரோக்கியத்தை பேணிப்பாதுகாக்க விரும்பும் இன்றைய இளம் தலைமுறையின் கவனத்தை கவர்ந்தது இழுக்கும் விளம்பர விளையாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

இது அனைவரும் அறிந்த உண்மை..!

படித்தவர்கள் முதல் பாமர பார்வையாளர்களை சொக்க வைத்து சுண்டி இழுக்கும் வகையில், வியாபார விளம்பரங்கள் வித விதமாக, விநோதமாக வந்து கொண்டே இருக்கிறது.

பொருட்களின் தரம் நிரந்தரமானதா? அதன் உண்மை தன்மை எத்தகைய சாத்தியமானது என்பதை பற்றி எந்த விளம்பர படைப்பாளிகளும் கவலைப்படுவதில்லை.

அவர்களின் நோக்கம் எல்லாம் வர்த்தகர்களின் கல்லா பெட்டியை நிறைக்க வேண்டும்.

அதேவேளையில் நிரந்தரமான வாடிக்கையாளர்களை உருவாக்குவதே…..! இதுதான் அவர்களின் பகட்டான விளம்பர படைப்புகளின் வசூல் சூட்சமம் என்றால் மிகையாகாது.

நிறைய பத்திரிக்கைகளில் வரும் நுகர்பொருட்களின் விளம்பரங்களை நாம் உற்றுபார்த்தால் ஒரு உண்மை தெரியும்,உதாரணமாக  மது பாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கரில்…..!

” மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு, குடி குடியை கெடுக்கும்” என்றும்.

சிகெரட் அட்டை பெட்டிகளில் “புகை நமக்கு பகை, புகை உடல் நலத்துக்கு கேடு” என்று,

கண்ணுக்கு தெரியாத சின்ன எழுத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்.

அதுபோல்தான் பல நுகர்பொருள் விளம்பரங்களில் “பக்கவிளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் பொறுப்பல்ல” என்று அப்பட்டமாக அச்சில் அறிவித்துள்ளதை நாம் கவனிப்பதில்லை…!

“இந்த விளம்பரத்தின் அனைத்து பொறுப்பும் அந்த நிறுவனத்தையே சாரும்” என்றுதான், பல பெரிய, பெரிய முன்னனி செய்தி ஊடகங்கள், அவர்கள் வெளியிடும் விளம்பர பொருட்களுக்கு பொறுப்பு ஏற்றுகொள்வதில்லை.

வர்த்தக சந்தையில்…..   விற்பவரின் திறமை, வாங்குபவரின் தலை எழுத்து என்று தான், இன்று பல நுகர்பொருட்கள் சந்தை படுத்தப்படுகின்றன.

ஆனால் நமது Nature’s Herbal & Ayurvedic Products ன் மூலிகை தயாரிப்புகள் எல்லாம் பட்டவர்த்தமான ஒரு வெள்ளை அறிக்கை என்கிறார் அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் சாருமதி….!

அங்கம் முழுவதும் பொங்கும் இளம் மேனியில் இன்றைய கன்னியர்கள் கண்ணில் பட்ட, கண்ட கண்ட இரசாயன கழிவுகளை வழித்து எடுத்து  தேய்த்து.. பூசி வருகின்றனர்.

இது நாளடைவில் பூஞ்சான் விளைவுகளால் அவர்களது உடல் நொஞ்சானாகி விடக் கூடாது என்பதே நமது GCT யின் கவலையாகும்.

அதன் அக்கரையுடன் உருவான பல Herbal பொருட்களில் ஒன்றுதான் பட்டு போன்ற மேனிக்கு Bath powder இந்த Herbal Bath Powder ரை நமது நிறுவனம் நீண்ட நெடும் நாட்களில் ஆய்வுக்கு பின் மிகப்பெரிய விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் உருவாக்கி தந்து இருக்கிறது, என்ற அப்பட்டமான பொய்யை சொல்ல தயாராகவில்லை.

இந்த Bath Powder எல்லாம் நமக்கு நமது பாட்டிமார்கள் அனுபவித்து செய்து, நம்மை குளிப்பாட்டி மகிழ்ந்த நலுங்கு மாவு எனும் ஸ்நான பவுடர் தான் அது, அதாவது குளியல் பொடி.

இதுமட்டுமல்ல நமது GCT யின் அனைத்து தயாரிப்புகளும் நமது முன்னோர்கள் கற்றுத் தந்த பாரம்பரிய மிக்க ஆயுர்வேத மூலிகை பொருட்களே…!

Herbal bath powder எனும் நலுங்கு பவுடரில் கலந்துள்ள கஸ்தூரி மஞ்சள், ரோஜா,ஆவாரம்பூ,வேம்பு, மற்றும் கற்றாழை,நெல்லி, வெள்ளரி போன்ற 18 வகையான பாரம்பரிய குளியல் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதில் வெள்ளைமஞ்சள் சேர்க்கபட்டுள்ளது என்பது தனி சிறப்பாகும்….!

நமது G.C.T.,யின் Nature’s Herbal & Ayurvedic Products ன் மூலிகை தயாரிப்பில் உருவான   Herbal bath powder எனும் நலுங்கு பவுடர்.
இதில் சேர்க்கப்பட்ட மூலிகைகளின்  மகத்துவங்கள்  நாம் அனைவரும் அறிந்ததே….! இருப்பினும் அதன் மருத்துவத்தன்மையை பின்னர் விரிவாகப்பார்க்கலாம்.

மேலும் அத்தனை மூலிகைகளும் பவுடராகவும் நமது G.C.T., கிடைக்கும் என்றார் டாக்டர் சாருமதி..!

SHARE