ஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…!

0
165
ஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி...!
Advertisement
Advertisement

ஊட்டி நகரையொட்டி எல்க்ஹில், தொட்டபெட்டா உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன.

இந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வன விலங்குகள் வாழ்கின்றன.

அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடியும் வழிதவறியும் நகருக்குள் வன விலங்குகள் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு கரடி ஒன்று ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே உலாவிக்கொண்டிருந்துள்ளது.

கரடியைக் கண்டதும் நாய்கள் கூட்டமாகத் துரத்தியுள்ளது. பயந்து ஓடிய கரடி அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளது.

இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி சென்றவர்கள் கரடியைப் பார்த்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக வந்த வனத்துறையினர் கரடி இருப்பதை உறுதி செய்து மக்களை தாக்காதவாறு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதாலும் மறைவிடங்கள் உள்ளதாலும் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

கரடியைப் பிடித்து பாதுகாப்பாக வனத்துக்குள் விட வனத்துறையினர் முடிவுசெய்துள்ளனர்.

ஆனால், மயக்க ஊசி செலுத்த வனக் கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுவருகிறது. கரடியின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.