பாஸ்கர் தி ராஸ்கல்

33
560
அரவிந்தசாமி
Advertisement
Advertisement

மம்முட்டி-நயன்தாரா நடித்து, கேரளாவில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற மலையாள படம் தமிழில் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிறார். மலையாள படத்தை டைரக்டு செய்த சித்திக்கே தமிழ் படத்தையும் டைரக்டு செய்கிறார்.

‘அடிதடி’ உள்பட சில படங்களை தயாரித்த முருகன், இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

கதாநாயகியாக நயன்தாராவையே நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அவர் மற்ற படங்களில் இரவு-பகலாக நடித்துக் கொண்டிருப்பதால், வேறு கதாநாயகியை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதற்காக அமலாபால், நித்யா மேனன், பிரபல இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா ஆகிய மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மூன்று பேரில் கதாநாயகி யார்? என்பது ஒன்றிரண்டு நாட்களில் முடிவாகி விடும் என்று தெரிகிறது.

அரவிந்தசாமி

அநேகமாக சோனாக்‌ஷி சின்ஹா உறுதி செய்யப்பட்டு விடுவார் என்று பேசப்படுகிறது. சோனாக்‌ஷி சின்ஹா, ‘லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு தமிழ் படத்தில் நடிக்கவில்லை. அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.