பாகுபலி 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

28
545
பாகுபலி
Advertisement
Advertisement

இந்தியாவின் மிக பிரமாண்ட படம் பாகுபலி. 250 கோடியில் தயாரான படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் வெளிவந்தது.

பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? தேவசேனா (அனுஷ்கா) அடிமைப்பட்டது ஏன்? என்ற கேள்விகளோடு முடிந்தது முதல் பாகம்.

அந்த கேள்விக்கான விடைகள் இரண்டாம் பாகத்தில் இருக்கிறது. இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் 300 கோடி என்கிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் நேற்றுடன் முடிந்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக பணியாற்றிய பாகுபலி படக்குழுவினர் இணைந்து பிரமாண்ட குரூப் போட்டோ ஒன்றை எடுத்துக் கொண்டு கண்ணீருடன் பிரிந்தனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து அதன் தயாரிப்பாளர் ஷோபு தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாகுபலி 2 பாகத்தின் படப்படிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.

2012ல் தொடங்கிய எங்கள் பயணம் அற்புதமான எங்கள் படக்குழுவால் சாத்தியமாகியிருக்கிறது.

தற்போது கமலக்கண்ணன் தலைமையில் கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

எந்த நிபந்தனையும் இல்லாமல் படத்தின் ஹீரோ பிரபாஸ் நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்திருப்பது எங்களால் மறக்க முடியாத ஒன்று. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமன்னா கூறியிருப்பதாவது:

மென்மையான பயந்த பெண்ணான என்னை வலிமையானவளாக மாற்றியவர் பாகுபலி அவந்திகா.

குதிரையேற்றம், வாள்வீச்சு, என எல்லாவற்றையும் கற்றுக் கெடுத்து என்னை தைரியமாக மாற்றிய அவந்திகாவை விட்டு பிரிகிறேன். என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார் தமன்னா.