8 வார கெடு.. முடிவை நெருங்கும் அயோத்தி பிரச்சனை..!

8 வார கெடு.. முடிவை நெருங்கும் அயோத்தி பிரச்சனை..!
Advertisement
Advertisement

அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர்கள் குழு நியமிக்கப்பட்டதன் மூலம் இன்னும் 80 நாட்களுக்குள் இந்த பிரச்சனை மொத்தமாக முடியும் நிலை உருவாகி உள்ளது.

அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்டால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுதான் அயோத்தி பிரச்சனை குறித்து இனி பேச்சுவார்த்தை நடத்தும். முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்படும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு இன்னும் 4 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதன்பின் 8 வாரத்திற்குள் பேச்சுவார்த்தையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்து இறுதி தீர்ப்பை அளிக்கும்.

இந்த மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தையை நீதிமன்ற கவனிக்கும். இதுகுறித்து எந்த விதமான சிறிய தகவல் கூட வெளியில் கசிய கூடாது.

இந்த பேச்சுவார்த்தை ஃபைசாபாத்தில் நடைபெறும். விசாரணையில் ரகசியம் காப்பதே மிக முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த குழு மூலம் அயோத்தி பிரச்சனை தேர்தலுக்கு முன் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்க 80 நாட்களாவது குறைந்தபட்சம் இருக்கிறது.

அதனால் அயோத்தி பிரச்சனையில் இன்னும் 50 நாட்களுக்குள் முக்கியமான முடிவு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.