எல்லையில் மீண்டும் தாக்குதல் : 4 வீரர்கள் வீரமரணம்….!

எல்லையில் மீண்டும் தாக்குதல் : 4 வீரர்கள் வீரமரணம்....!
Advertisement
Advertisement

காஷ்மீரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் இன்று (பிப்.,18) காலை, ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் சுட்டதில் ஒரு மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் ஒரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.