ஜோதிடம் கூறும் சிவ வழிபாடு…!

ஜோதிடம் கூறும் சிவ வழிபாடு...!
Advertisement
Advertisement

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த சிவரூபத்தை வணங்கலாம்?
மகா சிவராத்திரி அன்று சிவனை எப்படி வணங்க வேண்டும்?

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கற்கள், அதிர்ஷ்ட தெய்வங்கள் இருக்கும்.

அது போலவே நட்சத்திரத்திற்கும் அதிர்ஷ்ட தெய்வங்கள், தலவிருட்சங்கள், கற்கள், கோயில்கள் என அனைத்தும் இருக்கின்றது.

தெய்வத்திற்கு நிகரானது எதுவும் உண்டோ? எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றம் இறைவனை வணங்குவதன் மூலமே கிடைக்கின்றது.

அண்ட சராசரங்களை காத்து இரட்சிக்கும் எம்பெருமானை வணங்கினால் எந்தத் துன்பமும் நம்மை நெருங்காது. ‘சிவ சிவ’ என்று சொன்னால் சிக்கல்கள் தீரும்.

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் சிவனை வழிபட சிறந்தது என்று பார்ப்போம்.தொடர்புடைய படம்

1. அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவனை வணங்க வேண்டும்.

2. பரணி – சக்தியுடன் கூடிய சிவபெருமானை வழிபட வேண்டும்.

3. கிருத்திகை – தனியாக உள்ள சிவனை வணங்க வேண்டும்.

4. ரோகிணி – பிறை சூடியப் பெருமானை வணங்குவது நல்லது.

5. மிருகசீரிஷம் – முருகனுடன் இருக்கும் சிவனை வணங்குவது சிறந்தது.

6. திருவாதிரை – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் தொழுதல் வேண்டும்.

7. புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவனை வழிபட நன்மை.

8. பூசம் – நஞ்சுண்டும் சிவ ரூபத்தை வழிபட நல்லது.

9. ஆயில்யம் – விஷ்ணுவுடன் உள்ள சிவனை வழிபடவும்.

10. மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன் வணங்குதல் நலம்.

11. பூரம் – அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது சிறப்பு.

12. உத்திரம் – நடராஜ பெருமான் – தில்லையம்பதியை வழிபட வேண்டும்.

13. அஸ்தம் – தியான கோலத்தில் இருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும்.

14. சித்திரை – பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்தை தரிசிக்கும் சிவனை வணங்க நல்ல பலனை தரும்.

15. சுவாதி – சகஸ்ரலிங்கத்தை தரிசித்து வணங்க வேண்டும்.

16. விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவனை வழிபடவும்.

17. அனுஷம் – இராமர் வழிபட்ட சிவனை வழிபட்டால் நல்லது.

18. கேட்டை – நந்தியுடன் உள்ள சிவனை வழிபட்டால் சிறப்பு.

19. மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன் கோலத்தை தரிசிக்க வேண்டும்.

20. பூராடம் – சிவ சக்தி கணபதியை வழிபடவும்.

21. உத்திராடம் – ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை காணும் சிவனை வழிபட நல்லது.

22. திருவோணம் – சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவபெருமானை வழிபடவும்.

23. அவிட்டம் – மணக்கோலத்துடன் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும்.

24. சதயம் – ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவனை கண்டு வழிபடவும்.

25. பூரட்டாதி – சிவன் சக்தி விநாயகரை மடியில் வைத்திருக்கும் காட்சியை வணங்க நல்லது.

26. உத்திரட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவனை வணங்கலாம்.

27. ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவனை வணங்க வேண்டும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவரூபங்களை வழிபட்டு வந்தால் துன்பமற்ற வாழ்வை அடையலாம்

எந்த ராசிக்காரர்கள் எப்படி மகா சிவராத்திரி அன்று சிவனை வணங்க வேண்டும் தெரியுமா?

மகா சிவராத்திரி அன்று ஒருவர் சிவனை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம் மற்றும் ஆசை நிறைவேறும்.

அதோடு, இந்நாளில் சிவ லிங்கத்திற்கு பல பொருட்களால் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும்.

இங்கு மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளைக் கொண்டு சிவனை வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள், சிவ லிங்கத்தை கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்து, ஊமத்தை பழத்தை படைத்தால், ஆசைகள் நிறைவேறும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள், பாங் பால்/நீரால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், சிவன் நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள் புரிவார்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், சிவன் வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.

கும்பம்
மகா சிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம்/லாபம் கிடைக்க உதவுவார்.
மீனம்

மீன ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று குங்குமப்பூ பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க வழி செய்வார்.

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119