வெளியானது ஆர்யா – சயிஷா ஜோடியின் திருமண தேதி..!

வெளியானது ஆர்யா - சயிஷா ஜோடியின் திருமண தேதி..!
Advertisement
Advertisement

நடிகர் ஆர்யா – சாயிஷா ஜோடிக்கு வரும் மார்ச் மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா.

இவரது திருமணம் எப்போது என்பதை தமிழகமே ஆர்வமாக எதிர்பார்க்கிறது என்பது,

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’க்கு கிடைத்த வரவேற்பு மூலம் உறுதியானது.

சமீபத்தில் ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் தனது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், அடுத்ததாக அவரது திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது

இந்நிலையில், தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்த நடிகை சாயிஷாவை ஆர்யா காதலிப்பதாக சமீபகாலமாக ஊடகங்களில் ஒரு பேச்சு உள்ளது.

விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக ஆர்யா – சாயிஷா திருமணம் வரும் மார்ச் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் இந்தத் திருமணம் மார்ச் 9 மற்றும் 10 என இரண்டு தினங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

இருவீட்டாரின் சம்மதத்தோடு இந்தத் திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.