ஆர்கே நகர் மக்களின் வாக்குரிமை பறிப்பா -அதிரடி அலசல்

கொடுக்க முன்வந்தாலும் வாங்க மாட்டார்கள் மக்கள் .

0
313
Advertisement
Advertisement

கையூட்டு கொடுப்பது குற்றம் என்றால் வாங்குவதும் குற்றம் . ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தினகரன் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவாம் .

இந்த கணக்கையும் தேர்தல் செலவாக ஆணையம் வரவு வைக்க திட்டமாம் .

அதன் பேரில் தினகரனின் பதவி பறிபோகும் என்று அறிவாய்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன .

நமது கேள்வி ….

தினகரன் பணம் கொடுத்ததை நிரூபித்தால் பதவியை கண்டிப்பாக பறிக்கவேண்டும் .

ttv-dhinakaran

யார் யாருக்கு எவ்வளவு என்பதை இறுதி செய்தால்தான் ஆணையம் தினகரனின் செலவு கணக்கை இறுதி செய்ய முடியும் .

அப்படி செய்தால் ,வாங்கியவர்கள் பட்டியலும் ஆணையத்திடம் வந்துவிடும் .

கொடுத்த தினகரனின் பதவியை பறித்ததோடு நின்று விடாமல் ,வாங்கியவர்களின் வாக்களிக்கும் உரிமையையும் பறிக்க வேண்டும்.

அப்போதுதான் வரும் தேர்தல்களில் கொடுக்க முன்வந்தாலும் வாங்க மாட்டார்கள் மக்கள் .

அதிமுக இரு அணிகள் இணைகிறதா..?

ஆளும்கட்சி கொடுத்த 6000 கணக்கையும் தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து ,கொடுத்தவர்கள் ,வாங்கியவர்கள் என அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதவி பறிப்பா ….வாக்குரிமை பறிப்பா …பார்போம் .