திருமாவளவனுக்கு அர்ஜூன் சம்பத் வேண்டுகோள்

ஒகி புயல்

1
419
arjun sampath
Advertisement

ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடுபவர் இப்படி பேசக் கூடாது

Advertisement

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்புப் பணியிலும், நிவாரணம் கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று  இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் ஒகி புயல் , மழை காரணமாக குமரி மாவட்டம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.

ஒகி புயல்

கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும்  நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சம்காட்டுகிறது.

மண்டைக்காட்டு கலவரத்தின்போது, 11 இந்துக்கள் காணாமல் போனவர்கள் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை அவர்களைக் கண்டுபிடிக்கவில்லை. இழப்பீடும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு நிவாரணத் தொகையோடு, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கும், பெரும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், மின் தடை காரணமாக புயல் காரணமாக வீடுகள், வாகனங்கள் கடும் சேதம் அடைந்தவர்களுக்கும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள், பிஷப்புகளை மட்டும் சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்கள், பாதிக்கப்பட்ட மீனவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து இந்துகளுக்கு விரோதமாகப் பேசிவருகிறார்.  அது கண்டிக்கத்தக்கது.

இந்தப் போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடுபவர் இப்படிப் பேசக்கூடாது. அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

SHARE