சபரிமலையில் இன்று நடை திறப்பு….!

0
150
சபரிமலையில் இன்று நடை திறப்பு....!
Advertisement
Advertisement

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக சபரிமலையில் அசாதாரண நிலை நிலவுகிறது.

மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் சபரிமலையில் பழைய நிலையே தொடர்கிறது.

பெண்கள் வந்தால் தடுக்க பக்தர்களும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க போலீசாரும் தயாராக உள்ளனர். இதனால் கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10:00 மணிக்கு பின்னர்தான் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுப்பப்படுவார்கள். சன்னிதானம் மற்றும் பம்பையில் ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வேறு விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து 5:15 மணிக்கு நெய்யபிஷேகம் துவங்கும். தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 17-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.