எரிக்சன் வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!

எரிக்சன் வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!
Advertisement
Advertisement

எரிக்சன் நிறுவனத்திடம் பெற்ற தொகையை திரும்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியை உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. எரிக்சன் வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்காக எரிக்சன் நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்பட்டுள்ளது.

ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ரிலையன்ஸ் குரூப் ஏமாற்றி வந்துள்ளது.

இது தொடர்பாக ரூ.550 கோடி கடன் பாக்கியை பெற்றுத்தர எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஏற்கெனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ.550 கோடி பணத்தை எரிக்சன் நிறுவனத்துக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதில் சிறு பகுதி தொகையை மட்டும் வழங்கிய ரிலையன்ஸ், மீதி தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது.

இன்று இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய அனில் அம்பானி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என அறிவித்தது.