மார்பை பிளக்காமல் இரத்த நாளத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை-ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை

அதிநவீன அறுவை சிகிச்சை

0
449
Advertisement

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை

Advertisement

56வயது பெண்… இடது கை மற்றும் முதுகுப்பக்கத்தில் வலியால் சில மாதங்கள் அவதிப்பட்டு வந்தார். கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்த அவருக்கு மார்பு பகுதி எக்ஸ்ரே மற்றும் அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மார்பு பகுதி எக்ஸ்ரேயில், அவரது இடப்பக்க மார்பு பகுதியில் பெரிய அளவில் ஒரு வீக்கம் இருந்ததுதெரியவந்தது.வலதுபுறநுரையீரலைஅதுஅழுத்திக்கொண்டிருந்தது. முழுமையாக அறிய மார்பு பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அப்போது பெருந்தமனி ரத்தநாளம்  அருகில் பலுான் போன்று வீக்கம் இருந்தது. இந்த ரத்த நாளம் தான் நமது உடலில் பெரிய ரத்த நாளம். இந்த வீக்கம் பெரியதாகி, ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு வெடிக்குமானால், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

அதிக அளவில் ஏற்பட்ட இந்த வீக்கம், வெடிக்கும் நிலையில் இருந்தது. உடனடி சிகிச்சை அளிக்கவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். பழைய முறைப்படி மார்பை திறந்து தான் சிகிச்சை செய்ய வேண்டும். தையல் போட்டுத்தான் இணைக்க வேண்டும்.

மார்பை திறக்க வேண்டிய அவசியம் இல்லை

தற்போதைய நவீனமுறையில், மார்பை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. ரத்த நாளம் எந்த இடத்தில் வீக்கம் உள்ளது என்பதை ரத்த நாளத்தினுாடே ஒரு ஒயர் போன்ற குழாயை செலுத்தி, வீக்கம் உள்ள இடம் கண்டறியப்பட்டு, வீக்கம் நீக்கப்படும்.

இந்த அறுவை சிகிச்சையை, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் கதிரியக்க குறுக்கீட்டுத் துறை டாக்டர் பி.முத்துராஜ், டாக்டர் எஸ்.தியாகராஜமூர்த்தி மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறை குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. இத்தகைய அதிநவீன தொழில்நுட்பத்திலான அறுவை சிகிச்சை மிகவும் விலை உயர்வானது. எளிய மக்கள் இந்த சிகிச்சையை பெறுவது கடினமாக இருந்தது. ஆனால், ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இந்த அதிநவீன அறுவை சிகிச்சை முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சிக்கலான நோய்க்கு, துல்லியமான முறையில் சிகிச்சை அளிக்க, உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட சிடி ஸ்கேன் வசதியுள்ள மருத்துவமனையில் மட்டுமே இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள முடியும். தற்போதைய தலைமுறை அதிநவீன கருவிகள் மட்டுமே துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்களுக்கு வழிகாட்டுகின்றன. மிக குறைந்த கருவிகளைக் கொண்டு எளிதாக சிக்கலான சிகிச்சையை, குறைந்த செலவில் மேற்கொள்ளும் தொழில்நுட்பம் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள மக்களும் பயன்பெற இது வாய்ப்பாக அமைகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையானது, குறைந்த செலவில் இருதய நுண்துளை அறுவை சிகிச்சையில் ஒரு முன்னோடி மருத்துவமனையாகும். இந்த முறையைப் பயன்படுத்தி பல வால்வு மாற்றுக்கள் செய்யப்படுகின்றன. கார்டியாக் அறுவை சிகிச்சையில் குறைவான இறப்பு விகிதம் 1.5% செய்யப்படுகிறது. இந்த இறப்பு விகிதம் அமெரிக்க அல்லது ஐரோப்பிய மையங்களை விட குறைவாகவே உள்ளது.

SHARE