நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்

37
641
நயன்தாரா
நயன்தாரா
Advertisement
Advertisement

நயன்தாரா பாணியில் ஹீரோ இல்லாமல் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்கிறார் அமலா பால்.

திருமண வாழ்க்கை கசந்துவிட்ட பிறகு அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அதனால் அவரை தேடி வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

புதிய படம்

ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  புதுப் படம் மைனா படத்தை தயாரித்த நிறுவனம் ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. ஹீரோ இல்லாத இந்த படத்தை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இணை இயக்குனர் வினோத் இயக்குகிறார்.

நயன்தாரா

 தான் ஹீரோ இல்லாமல் ஹீரோயின்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அமலாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

விஐபி2 அமலா தற்போது தனுஷின்

விஐபி 2

படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அதை முடித்த பிறகு அவர் திருட்டுப் பயலே 2 படத்திற்காக நியூசிலாந்து செல்கிறார். கிளைமாக்ஸ் மற்றும் ஒரு பாடல் அங்கு படமாக்கப்படுகிறது.

அரவிந்த் சாமி

மலையாளத்தில் ஹிட்டான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் அரவிந்த் சாமியுடன் நடிக்கிறார் அமலா பால். க்வீன் படத்தின் மலையாளம் ரீமேக்கிலும் அமலா நடிக்கிறார்.