விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக அமலா பால் ஒப்பந்தம்

35
628
விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக அமலா பால் ஒப்பந்தம்
Advertisement
Advertisement

‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘மாவீரன் கிட்டு’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கி வரும் ‘கதாநாயகன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.

அவரே தயாரித்து வரும் இப்படத்தில் கத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

‘கதாநாயகன்’ படத்தைத் தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஷ்ணு விஷால்.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 29ம் தேதி முதல் துவங்கவிருக்கிறது.

தற்போது இப்படத்தின் நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.