நிரம்பி வழியும் அமலா பாலின் கால்ஷீட் டைரி!

39
572
Advertisement

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை

Advertisement

அம்மா கணக்கு படம் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கும் தன் கணக்கை தொடங்கிய அமலா , தற்போது மைனா படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், ஹீரோயின் சம்பந்தமான படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.

இதில் அமலா பால் நடிக்கிறார்.

இதில் ஹீரோ யாரும் கிடையாது. இந்தப்படத்தை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய வினோத் இயக்குகிறார்.

இவர் பல விளம்பர படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமலாபால் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.

இதனையடுத்து திருட்டு பயலே இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சிக்காக நியூசிலாந்து செல்ல இருக்கிறார்.

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடித்து ஹிட்டான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் அமலாபால் நடிக்கிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக அரவிந்த் சாமி நடிக்கிறார்.

அதே போல் குயின் ஹிந்தி படத்தின் மலையாள ரீமேக்கிலும் அமலாபால் நடிக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

இதனால் அமலாபாலின் டைரி நிரம்பியுள்ளது.