அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர் சேர்க்கை

வாழ்கை வரலாறு நீக்கம்

0
1349
Advertisement

பசும்பொன்னில்

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி கூட்டம்   மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் கமுதி பசும்பொன்னில்  நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சின் ராமநாதபுரம் இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர கமுதி எஸ் .கே .தேவர் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் எஸ் .சண்முகவேல் அவர்கள்  முன்னிலை வகித்தார் மாணவர்அணி மத்தியக்குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள் அனைவரையும் வரவேற்பு செய்தரர்.
இந்த இளைஞர் அணி கூட்டத்திற்கு வருகைதந்த தேசிய இளைஞர் அணி தலைவர் திரு .சுப்புராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பின்பு அவர் பேசியது இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இங்கே இல்லை மத்திய மாநில அரசுகள் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக்குகளை வழங்க வேண்டும் அதுபோல நமது எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது அதனை மனதி வைத்துக்க்கொண்டு இளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என்றார் .
ராமநாதபுரம் மாவட்ட மேற்பார்வையாளர் திரு நல்லமுத்து அவர்கள் கலந்து  கொண்டு தற்புது அரசியல் சூழ்நிலைகளை பற்றி பேசினார் இந்த கூட்டத்திற்கு வருகைதந்த தேசிய இளைஞர் அணி செயலர் திரு பூவலிங்கம் என்ற மாரி அவர்கள் இந்தியாவில் இளைஞர்கள் சாதி மதம் பாகுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றார்.
 மதுரையில் இருந்து வருகை தந்த இளைய நேதாஜி வே சுவாமிநாதன் அவர்கள் அழகுமீனா வழக்கறிஞர் பூவநாதன் பூமிநாதன் அ இ பா பி மாவட்ட துணைத்தலைவர் வெங்கடாசலம்  மாவட்ட இளைஞர் அணி தலைவர் சடையாண்டி செந்தில்குமார் தேவர்  ஆகியோர் பேசினார்கள்   இதில் ராமநாதபுரம் சிவகங்கை திருநெல்வேலி புதுக்கோட்டை ஆகிய மாவட்டம்களில் இருந்து திரளாக இளைஞகர்கள் கலந்து கொண்டார்கள்
கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது 
தமிழக அரசின் ஆறாம் வகுப்பு  பாடப்புத்தகத்தில் உள்ள பசும்பொன் தேவர் அவர்களின் வாழ்கை வரலாறு நீக்கம் பற்றிய விவரங்களை அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும் 
மத்திய மாநில அரசுகள் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருக்கவேண்டும் 
என பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது முடிவில்  கமுதி முனீஸ்வரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
Advertisement
SHARE