விஜயகாந்த் – மு.க ஸ்டாலின் சந்திப்பு…!

விஜயகாந்த் - மு.க ஸ்டாலின் சந்திப்பு...!
Advertisement
Advertisement

மனிதாபிமானத்தோடு தான் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரை சந்த்தித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இன்று நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த்தை சந்தித்துள்ளார்.

உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்ததாகக் கூறினார். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ரஜினியைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினினும், விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு நலம் விசாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின் போது, அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியிருக்கிறார்.

அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காகவே அவரை சந்தித்தேன். நீண்ட நாட்களாக நண்பராக பழகிக் கொண்டிருப்பவர்.

என்னை எப்போதும் மரியாதையுடன் தான் அழைப்பார். கலைஞரது மறைவின் போது வெளிநாட்டில் இருந்த விஜயகாந்த் வீடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

கலைஞர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். இப்படியெல்லாம் நல்ல உள்ளம் கொண்ட அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து நாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் பாட வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மனிதாபிமானத்தோடு தான் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நான் சந்தித்தேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.