சசிகுமாருக்கு தங்கையானதில் மகிழ்ச்சி தான் – ஐஸ்வர்யா ராஜேஷ்

25
573
ஐஸ்வர்யா ராஜேஷ்
Advertisement

ஐஸ்வர்யா ராஜேஷ்

Advertisement

சில படங்களில் ஹீரோயின், சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என படத்திற்கு படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருபவர் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், துருவ நட் சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை என பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொடிவீரன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் .

இதே படத்தில் ஹன்சிகா, பூர்ணா என இரண்டு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், சசிகுமாரின் தங்கையாக  நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், எப்போதுமே நான் ஒரு படத்தில் கமிட்டாகும்போது அதில் யார் ஹீரோ, எத்தனை நாயகிகள் என்பதை பார்ப்பதில்லை.

கதையில் எனது பங்கு என்ன என்பதை மட்டுமே கருத்தில் கொள்வேன். அந்த வகையில், பார்க்கப்போனால் கொடிவீரன் படத்தில் எனக்கு அழுத்தமான வேடம்.

கதைப்படி தங்கை வேடமாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம். எப்படி காக்கா முட்டையில் அம்மா வேடம் பேச வைத்ததோ, அதேபோல் இந்த தங்கை வேடமும் என்னை பேச வைக்கும் வகையில் உள்ளது.

அதனால் சசிகுமாருக்கு தங்கையானதுகூட மகிழ்ச்சிதான் என்கிறார.