ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் ப்ளான்..!

0
221
ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் ப்ளான்..!
Advertisement
Advertisement

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.289 விலையில் புது ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.289 விலையில் புது சலுகையை அறிவித்துள்ளது.

48 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புது ரீசார்ஜ் பிளான், அதிகளவு வாய்ஸ் மேற்கொள்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் அறிவித்திருக்கும் புது சலுகை வோடபோன்யின் ரூ.279 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

ஏர்டெல் ரூ.289 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் வாய்ஸ் கால் மேற்கொள்ள பயனர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

வாய்ஸ் கால் சலுகையுடன் பயனர்களுக்கு 1 ஜி.பி. மொபைல் டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த சலுகைக்கு போட்டியாக வோடபோன் ரூ.279 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை வழங்குகிறது.

இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.