எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சைக்கு இல்லை..!

41
572
எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சைக்கு இல்லை..!
Advertisement

எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சைக்கு இல்லை..!

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடியது. எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சைக்கு இல்லை..!

பள்ளிக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் கேள்வி நேரத்தின் போது,

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இல்லையா என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி,

”தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

இவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், இதுதான் அரசின் நிலைப்பாடு.

தஞ்சையில் இடம் சரியாக அமைந்துள்ளதாக மத்திய குழு கூறியதால், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் அதனை குறிப்பிட்டேன்.

தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

தஞ்சை செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ் அமையவேண்டும் என்பதல்ல மத்திய அரசு குழு முடிவு எடுக்கும் இடத்தில் அமைக்கப்படும்.

உணர்வின் அடிப்படையில் தான் அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் மதுரையில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என வலியுறுத்தினர்” என்று கூறியுள்ளார்..