அதிமுக தேர்தல் அறிக்கை தயார்.. முதல்வரிடம் ஒப்படைப்பு..!

அதிமுக தேர்தல் அறிக்கை தயார்.. முதல்வரிடம் ஒப்படைப்பு..!
Advertisement
Advertisement

லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க, அதிமுக முன்னாள் அமைப்பு செயலாளர் பொன்னையன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவில், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னர்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

ஒரு மாத காலமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்தன. பொதுமக்களை ஈர்க்க தேவையான அம்சங்களுடன், இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தேர்தல் அறிக்கையை அளித்து

அந்த அறிக்கையில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அதனை மேற்கொண்ட பின்னர், அதிமுக தேர்தல் அறிக்கை, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பிற கட்சிகளை முந்திக் கொண்டு அதிமுகதான் முதலில் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.