நாளை முதல் வேளாண்மை கல்லூரிகளில் விண்ணப்பிகலாம்..!

38
740
நாளை முதல் வேளாண்மை கல்லூரிகளில் விண்ணப்பிகலாம்..!
Advertisement

நாளை முதல் வேளாண்மை கல்லூரிகளில் விண்ணப்பிகலாம்..!

Advertisement

தற்சமயம் பெரும்பாலான மாணவ மாணவிகளின் விருப்ப பாடமாக வேளாண்மை பட்ட படிப்பே உள்ளது. நாளை முதல் வேளாண்மை கல்லூரிகளில் விண்ணப்பிகலாம்..!

+2 ரிசல்ட் நாளை வெளியாகும் நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை பட்ட படிப்பிற்கு இணையதளம் மூலம்  நாளை (12-5-2017) முதல்  விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும்  பெற்றோர் மற்றும் மாணவர்கள்  நலனுக்காகவும் துறை சார்ந்த மற்றும் கல்லூரி வளாகங்கள் சார்ந்த சந்தேகங்கள், விடுதி வசதிகளை தெரிந்து கொள்ளவும்,

15-5-2017 திங்கட்கிழமையை வேளாண் கல்லூரிகள் பார்வையாளர்கள் நாளாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் உட்பட அதன் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள் அனைத்திலும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பார்வையிட ஏதுவாக இருக்கும். 

மேலும் அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்பு மற்றும் அது சார்ந்த துறைகளின் முக்கியத்துவம் ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்கள் குறித்தும் அந்தந்த துறையை சார்ந்த வல்லுநர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

வேளாண் படிப்பு படிக்க ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என வேளாண் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். 

கை பேசிஎண்:- 9489056730

அலுவலகம்:- 0422-6611302

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119