துக்ளக்கில் இணையும் விஜய்சேதுபதி-சமந்தா…!

0
120
துக்ளக்கில் இணையும் விஜய்சேதுபதி-சமந்தா...!
Advertisement
Advertisement

சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் , நடிகை சமந்தா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் கையில் ஏராளமான படங்கள் உள்ளன.

ஒரே சமயத்தில் ஐந்தாறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘சிந்துபாத் ‘மாமனிதன், ‘சூப்பர் டிலக்ஸ், ‘சயிரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

துக்ளக் அறிவிப்பு: 

இந்நிலையில் விஜய் சேதுபதி, தரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘96’ வது படத்தின் 100வது நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் தனது அடுத்தப் படத்தைப் பற்றி அறிவித்தார். அடுத்தப் படத்திற்கு ‘துக்ளக் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை டெல்லி பிரசாத் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இந்தப் படத்தை 7 ஸ்கீரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் முழுதும் அரசியல் படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருவரும் ஒன்றாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தாலும், அதில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிப்பதால், அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் துக்ளக் படத்தில் இவர்கள் சேர்ந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.