தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக இன்று அறிவிப்பு..!

தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக இன்று அறிவிப்பு..!
Advertisement
Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக இன்று அறிவிப்பு..!

இதன் 2வது கட்டத்தில் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1, என்.ஆர்.காங்கிரஸ் 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த கூட்டணியில் சேர தமிழ் மாநில காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் விரைவில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.