அதிமுக வில் அதிகாரம் செலுத்தும் கட்சிமாறிகள்…!

30
766
அதிமுக வில் அதிகாரம் செலுத்தும் கட்சிமாறிகள்...!
Advertisement

அதிமுக வில் அதிகாரம் செலுத்தும் கட்சிமாறிகள்…!

Advertisement

ஜெ க்கு பிறகு அணி அணியாக அதிமுக உடைந்து,தொண்டர் திண்டாடி வரும் நிலை தொடர்கிறது.

மூன்று அணிகளிலும் மாற்றுகட்சியிலிருந்து வந்த கட்சிகாரர்கள் ஆதிக்கம் செலுத்துவதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தவிக்கின்றனர்.

அதிமுக அம்மா அணியில் காங்கிரசு கட்சியிலிருந்து தாவிய கோவை செல்வராஜ்,

புரட்சித்தலைவி அணியில் தேமுதிமுக விலிருந்து தாவிய பாண்டியராஜன்,

பாஜக விலிருந்த மைத்ரேயன், தினகரன் அணியில் காங்கிரசு கட்சியிலிருந்து வந்த வெற்றிவேல் போன்றவர்கள்,

அதிமுக பற்றி கருத்து சொல்வது, தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவது உண்மை தொண்டர்களை வெறுப்படைய வைக்கிறது.

அதிமுக வை உண்மை விசுவாசமுள்ள ஒருவர் இயக்குவது எப்போது என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினார் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை அதிமுக விலிருக்கும் தொண்டர் ஒருவர்.

அவரின் ஆசை பலிக்குமா…பார்ப்போம்.