அதிமுக-தேமுதிக கூட்டணி அறிவிப்பு இன்று வெளியாகுமா..?

அதிமுக-தேமுதிக கூட்டணி அறிவிப்பு இன்று வெளியாகுமா..?
Advertisement
Advertisement

லோக்சபா தேர்தலுக்கான அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று (மார்ச் 08) இறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக- தேமுதிக இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும்,

விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் மார்ச் 06 அன்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த மாநாட்டு மேடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் படமும் கூட்டணி கட்சி தலைவர்கள் படங்களுடன் வைக்கப்பட்டது.

அதிமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே சமயம், திமுக.,வுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திய தகவல் வெளியானது.

இதனால் மாநாட்டு மேடையில் இருந்து சிறிது நேரத்திலேயே விஜயகாந்த்தின் படம் அகற்றப்பட்டது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன், தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் 4 மணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

தேமுதிக., வின் கூட்டணி முடிவில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அதிமுக -தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இன்று இறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகல் 12 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேமுதிக நிர்வாகிகள் வர உள்ளதாகவும்,

இவர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.,ஐ சந்தித்த பிறகு கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.