மய்யத்தில் இணைந்த கோவை சரளா…!

மய்யத்தில் இணைந்த கோவை சரளா...!
Advertisement
Advertisement

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. நூற்றுக்கணக்கான படங்களுக்கும் மேல் நடித்துள்ள கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை.

முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான கோவை சரளா கதாநாயகியாக நடித்த ஒரே படம் கமல்ஹாசனின் சதிலீலாவதி.

இந்த படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

சினிமாவை தாண்டி வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாத கோவை சரளா இன்று அரசியலுக்குள் நுழைந்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் இன்று சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட பெண் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த கோவை சரளா கமல் கட்சியில் இணைந்து மக்கள் சேவையாற்ற இருப்பதாக அறிவித்தார்.