அப்போலோ இட்லி கணக்கை கலாய்த்த கஸ்தூரி…!

அப்போலோ இட்லி கணக்கை கலாய்த்த கஸ்தூரி...!
Advertisement
Advertisement

“அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா… நல்லா சொல்லுறீங்க கணக்கு” என்று ஜெயலலிதாவின் உணவு செலவை தந்த அப்போலோ நிர்வாகத்தை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

75 நாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அப்போது அவர் இட்லி சாப்பிடுகிறார், பொங்கல் சாப்பிடுகிறார் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து அவரது உணவுக்காக ரூ.1.17 கோடி செலவானதாக அப்போலோ நிர்வாகம் தரப்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று கூறப்பட்டது.

இதையடுத்து, 2 இட்லிக்கு ரூ.1.17 கோடியா? என்றும், தெருக்கடையில இட்லி வாங்கிக் கொடுத்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய் கூட ஆகி இருக்காதே என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல நாட்டு நடப்புகளை மிச்சம் வைக்காமல் கலாய்த்து வரும் நடிகை கஸ்தூரியும் கோடிக்கணக்கில் கணக்கு காட்டியுள்ள அப்போலோ நிர்வாகத்தை தனது ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில்,

“அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா.. அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா.

அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா. நல்லா சொல்லுறீங்க கணக்கு !” என்று பதிவிட்டுள்ளார்.