பூஜையோடு தொடங்கிய தளபதி 63…!

பூஜையோடு தொடங்கிய தளபதி 63...!
Advertisement
Advertisement

விஜய் நடிக்கும் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் 63 ஆவது படத்திற்கு தயாராகியுள்ளார்.

தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து 3 ஆவது முறையாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்கிறார்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (கல்பாத்தி எஸ் அகோரம்) தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

வில்லு படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார்.

மேலும், கதிர், விவேக், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, யோகி பாபு ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனல் அரசு இப்படத்திற்கு சண்டை காட்சிகள் அளிக்கிறார்.

ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். கடந்தாண்டு நவம்பர் 28ம் தேதி இப்படத்திற்கு செட் அமைக்கும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.