அசுரனில் தனுஷ் ஜோடியகும் மலையாள நடிகை..!

அசுரனில் தனுஷ் ஜோடியகும் மலையாள நடிகை..!
Advertisement
Advertisement

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரி 2 படத்தைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 21ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் மாரி 2.

இப்படத்தைத் தொடர்ந்து அசுரன் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

வட சென்னை, ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு  ஜிவிபிரகாஷ் இசையமைக்க ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இம்மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தனுஷ் தனது டுவிட்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் .

இந்நிலையில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தனுஷ் உறுதி செய்துள்ளார்.