மலிவு விலை உணவுக்கு சிட்கோ வைத்த ஆப்பு-அம்பத்தூர் தொழிற்பேட்டை

நமது நிருபர் குழு

0
247
Advertisement

சிட்கோ நிர்வாகம்

Advertisement

எது  நடக்ககூடாது என்று நடைபாதை வியாபாரிகள் இறைவனிடத்தில் வேண்டினார்களோ….! அது இன்று நன்றாகவே நடந்தது…..!

அம்பத்தூர் தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று,  சிட்கோ நிர்வாகம் கடந்த 3.4.2018 அன்று எச்சரிக்கை நோட்டீஸ் விடுவித்து, 15 நாட்களுக்குள் கடைகளை அகற்றியாக வேண்டும் என்று அறிவித்திருந்தது.

அதன் படி இன்று(ஏப்ரல் 23)கடைகளை அகற்றுவதற்கான பணிகளை துவங்கியது நிர்வாகம்.

நேற்று வரை ஏதாவதொரு வழி பிறக்காதா..? என்று பிதா… சுதா…. பரிசுத்த…… ஆவிகளை… எல்லாம் வேண்டியும் பயன் இல்லாமல் போய்விட்டது.

பாவிகளின் பார்வையில், நடைபாதை வியாபாரிகளின் பரிதாபம் இரட்சிப்பை இழந்துவிட்டது.

இது பற்றிய செய்திகளை நாம் நேற்று நமது நிருபர் குழு விசாரணையில் கிடைத்த விபரங்களுடன் வெளியீட்டிருந்தோம்.

கடந்த 15 வருடங்களாக  நடந்தேறி வருகின்ற இந்த பிரச்சனை, இன்று புத்தம் புதுகாபியாக, வெற்றி நடை போட்டு விட்டது…..!

நல்ல வேலையாக கடந்த முறை, அகற்றப்படாத கடைகளை அரசு நிர்வாகம்…. அடித்து…. நொறுங்கி…… துவம்சம் செய்த செய்திகளை தின பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நல்ல தீனி…. போட்டதைப்போல் இல்லாமல், இந்த முறை,,,, எதிர்பாராத செய்திகள்…. பிசு….பிசுத்து விட்டது.

ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் அரசு திருப்பணியாளர்கள், நேற்று விடுமுறை நாளில் இந்த பணிகளை செய்து இருக்கலாம்.

வாரத்தின் முதல் நாளில் அதுவும் காலை வேளைகளில் எடுக்கப்பட்ட இந்த நல்ல முடிவானது இன்று கடுமையான போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.

இந்த நெரிசலில் சிக்கித்தவித்த பொதுமக்களின் சாபங்கள் மட்டும்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டிருந்தால் கட்டாயம் அதே இடத்தில் நாக்கை பிடிங்கி தற்கொலை செய்துவிடுவார்கள்…..!

இந்த ஆக்கிரமிப்பு தொடர் நிகழ்வுகளை பற்றி பல தொழிலாளர்களிடம் நாம் பேசியபோது:-

சதீஷ் நான் கடந்த 20 வருடங்களாக இதே சிட்கோ பகுதியில் உள்ள குறுந்தொழில் கூடத்தில் பணியாற்றிவருகிறேன்,இது மாதிரி பல தடவை பார்த்துவிட்டேன் இது எனக்கு புதியவையல்ல..!

எனக்கு இருக்கும் சந்தேகம் ஒன்றுதான் அதாவது 2016 -ல், சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி மற்றும் ஆணையாளர் டாக்டர்.பி.சந்தரமோகன், இ.ஆ.ப.,  தலைமையில்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள இதே ஆம்பிட் ஐ.டி. சாலை, ஏ.டி.சி சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சாலை, அம்பத்தூர் எஸ்டேட் முதல் பிரதான சாலை போன்ற முக்கிய சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த கடைகளை, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி தாக்கீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்கள்

2016 -க்கு பிறகு 2018-ல் தான்அதாவது இத்தனை நாட்கள் கழித்து இன்றுதான் சுகாதாரத்துறைக்கு, இப்படியான நடைபாதை கடையில் சுகாதாரம் இல்லாமல் போனது தெரியவந்துள்ளதா…? என்பதுதான்,

20வருஷமா இந்த பகுதி கையேந்திபவன் எனக்கு தாய் வீடு இதுலே சுத்தம் குறைவுதான் ஆனால் சுகாதாரம் குறைவு என்று செல்ல முடியாது,  இதுவரை எந்த நோய் நொடியும் வந்ததே இல்லை என்றார் சதீஷ்….!

வாங்கர சம்பளத்துளே முருகன் கடையிலே போய் சாப்பிட்டு கட்டுபடியாகாது, அங்க ஒரு வேளை சாப்புடர காசுலே….! கையேந்தி கடையிலே மூனுவேளை வயித்துக்கு திருப்தியா வாய்க்கு ருசியாக நாஸ்ட(டிபன்) மீன் குழம்பு சோறு கிடைக்கும் என்றார் தொழிலாளர் பாலன்..!

அதிகாரிகளுக்கு சரியானபடி மேட்டர் (லஞ்சம்) போய் இருக்காது அதன், கவனிக்க வேண்டியத கவணிச்ச சரி போயுடும், நஷ்டம் யாருக்கு  இந்த வியாபாரிகளுக்குத்தானே என்று, சில தொழிலாளர்கள்…! தோழர்கள்….! வெகுளித்தனமாக  பேசியது நகைச்சுவையாக இருந்தது.

அது வெகுளித்தனமில்லை…..! இன்று மதியம் கிடைக்கவேண்டிய மலிவு விலை உணவுக்கு சிட்கோ வைத்த…. உச்சி வெயில் ஆப்பு….!
என்று நமக்கு புரிந்தது…!

ஆகமொத்தத்தில் அரசு நடத்தும், அம்பத்தூர் சிட்கோ ஆக்கிரமிப்பு நாடகத்தில் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி வியாபாரிகள்…!?!
பரிதவிக்கின்றவர்கள் உழைக்கும் தொழிலாளிகள்…!!!! என்பதை இன்று கண்கூடாகப்பார்த்த போது பரிதாபமாக இருந்து.

அம்பத்தூர் “சிட்கோ” தொழிற்பேட்டையின், ” கையேந்தி பவன்” வாடிக்கையாளர்களின் அவதிக்கு அரசு என் செய்யப்போகிறது…?

கடந்து 20 ஆண்டுகளாக சிறு – குறுந்தொழிற்சாலை தொழிலாளர்களின் பசிக்கு உணவு தந்து, சுயத்தொழில் செய்து வந்தவர்கள் தொழிலாளர்கள் வரிசையில்வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமா….?

இதற்குள் ஆயிரம் உள்குத்து வர்த்தகம் இருக்கிறது என்பது மட்டும் சரியாக தெரிகிறது…!

SHARE