காவல் துறை மற்றும் KMCH மருத்துவமனை இணைந்து நடத்திய விபத்து இல்லா புத்தாண்டு கொண்டாட்டம்..!

0
130
காவல் துறை மற்றும் KMCH மருத்துவமனை இணைந்து நடத்திய விபத்து இல்லா புத்தாண்டு கொண்டாட்டம்..!
Advertisement
Advertisement

புத்தாண்டு கொண்டாடும் தருணத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்ப்படுத்துவதை தடுப்பதற்கு “கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை” மாநகர காவல் துறையினருடன் இணைந்து,

கோவை மாநகரத்தின் முக்கிய சாலை ஓரங்களில்
கண்காணிப்பு மையங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது..

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு அத்து மீறல்கள் ரோட்டில் நடந்து வருவது தெரிந்ததே.

டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு சாலைகளில் மது அருந்திவிட்டு ஆட்டம் பாட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் சிலர்
ஈடுபடுகின்றனர்.

மேலும் சிலர் மது அருந்திவிட்டு வேகமாக வாகனத்தை ஓட்டி
விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர் .

இந்த விபத்தில் இவர்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் அப்பாவி மக்களும் சிக்கி உயிர் இழக்க நேரிடுகிறது .

இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு கோவை மாநகர் காவல் ஆணையாளர் திரு.சுமித் சரண் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் திரு.பாலாஜி சரவணன் அவர்கள் பல்வேறு நூதன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இம்முறையும் கோவை மாநகர காவல் துறை, KMCH
மருத்துவமனையுடன் இணைந்து 22 கண்காணிப்பு மையங்களை அமைத்தது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபபவர்களை பிடிக்க இந்த கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு.

மேலும் இந்த மையங்களில் அவர்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் கவுன்சிலிங் (ஆலோசனை)
அளித்து இரவு முழுவதும் கண்காணிப்பு மையத்தில் தங்கவைக்கபட்டனர்.

இதை பற்றி KMCH மருத்துவமனை தலைவர் Dr நல்ல G பழனிசாமி அவர்கள் கூறுகையில்,

இந்த கண்காணிப்பு மையங்கள் மாநகரத்தின் முக்கியமான சாலைகளில் அமைக்கப்பட்டு,

முன்னெச்சரிக்கையாக முக்கிய இடத்தில ஆம்புலன்ஸ் நிறுத்தி
வைக்கப்பட்டது என்றார்.

இதன் மூலம் விபத்து இல்லாத 2019- ஐ புத்தாண்டாக கொண்டாட முயற்சி செய்தோம் என்று கூறினார்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119