அஜீத்தை வளைக்க விஜய் ’புகழ்பாடும்’ ஏ.ஆர். முருகதாஸ் !

41
542
முருகதாஸ்
Advertisement
Advertisement

தினந்தோறும் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை பற்றிய பதிவுகளை போட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதில், மிக சமீபத்திய பதிவுதான் ஜால்ரா ரகம்.

பைரவா ஷுட்டிங்குக்கு விஜய் வருவதற்கு முன் ரசிகர்கள் அவரை பார்க்க காத்துக் கிடப்பார்கள் இல்லையா? அந்த ஸ்டில்லை பதிவிட்டு இருக்கிறார்.

இத்தனைக்கும் பைரவா படத்தின் இயக்குனர் முருகதாஸ் இல்லை. பிறகு ஏன் இப்படி?

வேறொன்றுமில்லை. அஜீத்தின் கால்ஷீட் கேட்டு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக காத்துக்கிடக்கிறார் முருகதாஸ்.

அந்தப்பக்கத்தில் இருந்து சிறு புன்னகை கூட பதிலாக இல்லை. பிறகு சும்மாயிருப்பாரா?

அதனால் தான் இப்படி கிளம்பி விட்டார் என்கிறது சினிமா வட்டாரம்.