இதயத்தை திருடி விட்டாள் : போலீசில் புகார் அளித்த இளைஞர்..!

0
105
இதயத்தை திருடி விட்டாள் : போலீசில் புகார் அளித்த இளைஞர்..!
Advertisement
Advertisement

தனது இதயத்தை பெண் ஒருவர் திருடி விட்டதாகவும், அதனை மீட்டு தரும்படியும் இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.

கடந்த வாரம் நாக்பூரில், திருடு போன ரூ.82 லட்சம் மதிப்பிலான பொருட்களை உரியவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

போலீஸ் கமிஷனர் பூஷன் குமார் உபாத்யாயா முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களிடம் பேசிய உபாத்யாயா,

திருடு போன பொருட்களை நாங்கள் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கிறோம். ஆனால் சில சமயங்களில் எங்களால் தீர்க்க முடியாத புகார்களும் வருகிறது.

சமீபத்தில் இளைஞர் ஒருவர் நாக்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றிற்கு சென்று தனது இதயத்தை பெண் ஒருவர் திருடி விட்டதாகவும், அதனை மீட்டு தரும்படியும் புகார் அளித்துள்ளார்.

அவரிடம் புகாரை வாங்க மறுத்து, போலீசார் திருப்பி அனுப்பி உள்ளனர். ஆனாலும் அந்த இளைஞர் புகாரை வாங்கும்படி பிடிவாதமாக இருந்துள்ளார்.

பின்னர் உயரதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இத்தகைய பிரச்னைகள் இந்திய சட்டத்தில் உள்ள எந்த பிரிவிலும் வராது.

அதனால் இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது எனக் கூறி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்து அனுப்பி வைத்துள்ளனர் என்றார்.