கங்கையில் குப்பை கொட்டினால் அபராதம்..!

26
550
கங்கையில் குப்பை கொட்டினால் அபராதம்..!
Advertisement

கங்கையில் குப்பை கொட்டினால் அபராதம்..!

Advertisement

கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.கங்கையில் குப்பை கொட்டினால் அபராதம்..!

உலகில் மிகுந்த அசுத்தமான நதிகளில் கங்கை நதியும் ஒன்று என பெயர் பெற்றுள்ளது. இங்கு டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது.

தொழிற்சாலை கழிவுகள் இங்கு திருப்பி விடப்படுகின்றன.

இமயமலையில் சுத்தமான தண்ணீருடன் வரும் இந்த நதி பல நகரங்கள், கிராமங்களை கடந்து வரும் போது ரசாயனங்கள் கலக்கின்றன.

1,570 மைல் தூரத்திற்கு பாயும், இந்த நதியில், 4,800 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கலக்கிறது. இந்த நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில்,

கங்கை நதியிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்படும்.

கங்கை நதி கரையோரங்களில் இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

இது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

கங்கை நதிக்கரையோரத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் கிளை நதிகளில் நடக்கும் மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

செய்திகள்: ரோகிணி