நாகதோஷத்தை தீர்க்கும் கோவில்கள்.. பகுதி-1

353
4072
நாகதோஷத்தை தீர்க்கும் கோவில்கள்.. பகுதி-1
Advertisement

நாகதோஷத்தை தீர்க்கும் கோவில்கள்.. பகுதி-1

Advertisement

ராகு மற்றும் கேதுவை நாகத்தின் உருவத்தில் வழிபடுகிறோம்.நாகதோஷத்தை தீர்க்கும் கோவில்கள்.. பகுதி-1

இந்த இருவரால் ஏற்படும் தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் போக்கும் கோவில்களில் ஒன்றான காளஹஸ்தியை பற்றி இன்று பார்க்கலாம்.

காளஹஸ்தி

ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள்.

நாகதோஷம் உள்ளவர்களுக்குக் திருமணம் விரைவில் நடைபெறாது, தள்ளிக்கொண்டே போகும்.

குழந்தை பிறக்காது, சிலருக்கு ஆண் குழந்தை பிறக்காது. சிலருக்குக் கர்ப்பம் தங்காது; கருச்சிதைவு ஏற்படும். சில பெண்களுக்குத் தாலி தங்காது.

இதனால் இதை களத்திர தோஷம் என்றும், மாங்கல்ய தோஷம் என்றும் புத்திர தோஷம் என்றும் கூறுவார்கள்.

ராகு கேது தோஷம், நாகதோஷம், களத்திர (திருமண) தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எது இருந்தாலும் தகுந்த பரிகாரம் செய்து கொண்டு தோஷம் நீங்கி நன்மை பெற முடியும்.

அப்படிப்பட்ட பரிகாரத் தலங்களில் முதன்மையாக விளங்குவது ஆந்திராவில் உள்ள ‘காளத்தி’ எனப்படும் காளஹஸ்தி அங்கு நாள்தோறும் பரிகார பூஜை நடை பெறுகிறது.

சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் சாலையில் காளஹஸ்தி உள்ளது. காளத்தி வேடனான கண்ணப்ப நாயனார் முக்தி பெற்ற இடம் இது.

காளத்திநாதர் இங்கு நாகலிங்க வடிவில் காட்சி தருகிறார். இறைவன் நாக வடிவமாகக் காட்சி தருவதால், இது ராகு, கேது பரிகாரத்தலமாக விளங்கு கிறது.

நாள்தோறும் ராகு காலத்தில் தோஷ பரிகார பூஜை நடைபெறுவது இக்கோவிலில் உள்ள தனிச்சிறப்பு.

இங்குள்ள ‘ராகு, கேது சாந்தி நிலையம்’ என்ற மண்டபத்தில் இந்த பூஜை நடக்கிறது. மண்டபத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பரிகார பூஜை செய்யலாம்.

மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், ராகு, கேது தசாபுக்தி நடப்பவர்கள் இந்த சிறப்புப் பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.

காளஹஸ்தி கோவிலில் மிகப்பெரிய விசேஷம் என்னவெனில் அது வாயு ஸ்தலம் என்பதை விட சர்ப்பதோஷ சாந்தி ஸ்தலம் என்பதுதான் விசேஷம்.

காரணம் அங்குள்ள அம்பாளுக்கு 180 டிகிரி நேர் கீழாக- எதிர்புறத்தில் பாதாள விநாயகர் இருக்கிறார்.

அந்த பாதாள விநாயகர் கோவில் அமைப்பு கூட – பாம்பின் புற்றின் தலை போல் சிறியதாக அமைந்திருக்கும். பாம்பு புற்றுக்குள் செல்வதைப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.

முதலில் புற்றுக்குள் தலையை நுழைத்ததும் சட்டென்று தலையை வெளியே கொண்டு வந்து பின்பு தன் உடல், வால் புறத்தை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும். இது இயற்கை.

இதே போல் நாமும் இந்த பாதாள விநாயகர் கோவிலுக்குள் செல்லும்போது பாம்பைப் போல் தலையை முதலில் உள்ளுக்குள் நுழைத்து பின்பு மற்ற பாகங்களை நுழைந்து கொண்டு குனிந்து செல்ல வேண்டும்.

உள்ளே நுழைந்ததும் நாம் நிமிர்ந்து நடக்கலாம். கீழேயுள்ள விநாயகருக்கு நாமே நமது கையால் அர்ச்சனையோ அபிஷேகமோ பூச்சூடுவதோ செய்யலாம். இந்த விநாயகர் கேது சொரூபம்.

இந்த கோவிலில் சென்று பரிகாரம் செய்வதன் மூலம், திருமணத்தடை, குழந்தைபேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை..

தகவல்கள்: ரோகிணி