எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் பலி..!

32
568
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் பலி..!
Advertisement

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் பலி..!

Advertisement

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில்,எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் பலி..!

அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் ஒருவர்,

“காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில்,

பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்தியும் பீரங்கிக் குண்டுகளை பயன்படுத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் படையினர் எல்லையோரத்தில் உள்ள காதி கர்மாரா கிராமத்தை குறிவைத்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் பொதுமக்களில் இருவர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர்.

இந்தியத் தரப்பிலும் இத்தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது” என்றுகூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இரண்டு முறை எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

கடந்த மாதம் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்: ரோகிணி