நாம் மறந்து போன நம்ம நாட்டு மருந்து_ பகுதி 28..!

35
679
நாம் மறந்து போன நம்ம நாட்டு மருந்து_ பகுதி 28..!
Advertisement

நாம் மறந்து போன நம்ம நாட்டு மருந்து – பகுதி 28..!

Advertisement

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது.

நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன.

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாலேயே கடுக்காய் மருத்துவரின் காதலி எனப்படுகிறது.

தான்றிக்காய், நெல்லிக்காயுடன் கடுக்காய் சேர்த்து திரிபாலா எனப்படும் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.

தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வர உடல்பலம் ஏற்படும், வயிற்றுக் கோளாறு மாறும்.

கடுக்காய் தசை இருக்கும் தன்மை கொண்டது.

வயிற்றுவலி, அஜீரணம் மற்றும் வயிற்று அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்க இந்திய மருத்துவத்தில் தரப்படுகிறது.

இதன் வலிமை காரணமாகவே முந்தைய காலங்களில் கட்டடம் கட்டும் பணியில் கடுக்காய் அரைத்து பயன்படுத்தப்பட்டது.

இது வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமைச்சல், தலைநோய், இரைப்பு,

தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப் பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.

கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி தினமும் இரவு உணவு உண்டவுடன் அரை தேக்கரண்டி குடித்து வர வாதம் குணமாகும்.

உடல் வலுவடையும். ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டைநோய், வயிற்றுப் புண்,

காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.

மூக்கில் இருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய் தூளை எடுத்து மூக்கால் உறிய இரத்தம் வருவது நின்றுவிடும்.

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண்,

மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம்,

வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல்,

உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம்,

உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்று கூறுவர்.

பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து.

கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும்.

சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும்.

மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.

துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை.

ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம்.

அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும்,

நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும்,

கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

தகவல்கள்: ரோகிணி