பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு..!

208
1383
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு..!
Advertisement

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு..!

Advertisement

நேர்மையான முறையில் பணம் சம்பாதித்தவர்கள், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

கடந்த 2016 நவம்பரில் பழைய ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. டிசம்பர்31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று, தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நேர்மையாக சம்பாதித்தவர்களின் பணம் வீணாக குப்பைக்கு செல்லக்கூடாது.

மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. நேர்மையாக சம்பாதித்தவர்கள் பாதிக்கும் வகையில் உங்களது வார்த்தையில் இருந்து பின் வாங்கக்கூடாது.

நேர்மையாக பணம் சம்பாதித்த ஒருவர், தன்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகள் தன்னுடையது எனவும்,

டிசம்பர் 31க்குள் செலுத்துவதில் சிக்கல் இருந்தது என்பதை நிருபித்தால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கடுமையாக கூறினர்.

தொடர்ந்து, 2 வாரத்தில் மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், அனைவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டாம்.

பழைய ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று கூறியுள்ளார்.

செய்திகள்: ரோகிணி