காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல்..!

30
616
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல்..!
Advertisement

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல்..!

Advertisement

காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஆனந்த்நாக் மாவட்டம், பிரென்டி- பட்போரா பகுதியில் உள்ள வீடு ஓன்றில் லஷ்கர் அமைப்பை சேர்ந்த,

முக்கிய தலைவன் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த வீட்டை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

இதனை தெரிந்து கொண்ட பயங்கரவாதிகள், அப்பாவி மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி கொண்டு ராணுவத்தினர் மீது சுட துவங்கினர்.

ராணுவத்தினரும் இதற்கு பதிலடி கொடுக்க துவங்கினர். இந்த மோதல் பல மணி நேரம் நடந்தது.

இதில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் பஷீர் லக்சாரி மற்றும் அவரது உறவினர் ஆசாத் ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி பஷீர் லக்சாரிக்கு, போலீஸ் அதிகாரி அகமது தர் கொலையில் முக்கிய பங்கு உள்ளது.

இந்த மோதலில் அப்பாவி பொது மக்கள் 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

இதனால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கற்களையும் வீசினர். அந்த வீட்டில் இருந்த 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

செய்திகள்: ரோகிணி