பா.ஜ.க வினர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு..!

45
645
பா.ஜ.க வினர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு..!
Advertisement

பா.ஜ.க வினர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு..!

Advertisement

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருகிறோம்’ என்று சொல்லி, கோவையில் பொதுமக்களிடம் பா.ஜ.க-வினர் பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பா.ஜ.க வினர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு..!

பா.ஜ.க. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரியார்.தி.க., தி.மு.க., CPI, CPI (M), காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,

மனிதநேய மக்கள் கட்சி, SDPI உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறியுள்ளதாவது:

 ‘பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருகிறோம்’ என்று சொல்லி, கோவையில் பொதுமக்களிடம் பா.ஜ.க-வினர் பணம் வசூலித்துவருகின்றனர்.

இலவசமாக வீடுகள் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி, ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.50 முதல் 250 வரை வசூலிக்கின்றனர்.

இதுவரை, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல்களைப் பெற்றுள்ளனர்.

மேலும், ஏற்கெனவே கோவையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளைக் காண்பித்து, அதில் வீடுகளைப் பெற்றுத்தருவதாகவும் பொய்யான தகவலைச் சொல்லிவருகிறார்கள்.

அரசுத் திட்டங்களின் பெயரில் மக்களை ஏமாற்றும் நபர்களிடம் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பத்திரிகையில் அறிக்கை கொடுத்திருந்தார்.

அதை மீறியும்  இந்த மாதிரியான ஏமாற்று நடவடிக்கையில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே, மக்களை ஏமாற்றும் பா.ஜ.க-வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகள்: ரோகிணி