ஓட்டலில் தீவிபத்து – தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் உயிரிழப்பு…!

ஓட்டலில் தீவிபத்து - தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் உயிரிழப்பு...!
Advertisement
Advertisement

தலைநகர் டெல்லியின் கரோபாக் பகுதியில் அர்பித் பேலஸ் ஓட்டல் அமைந்துள்ளது. அங்கு இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை வேளையில் ஓட்டலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்டவர்களில் சிலர் காயமடைந்தனர்.

அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதில் சிக்கியிருந்த 34 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள ராம் மனோகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நிகழ்ந்தபோது பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும்,

பலியான 17 பேரில் ஏராளமானோர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாகவும் போலீசார் கூறினர்.