திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கும் ஆதார் வேண்டுமாம்..!

37
628
திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கும் ஆதார் வேண்டுமாம்..!
Advertisement

திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கும் ஆதார் வேண்டுமாம்..!

Advertisement

திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசிக்கவும் இனி வரும் காலங்களில் ஆதார் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே முடியும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதிலிருந்து, அறை முன்பதிவு, சிறப்புத் தரிசனம், லட்டு டோக்கன் என உண்டியலிடும் வரை,

அனைத்துக்கும் ஆதார் அவசியம் எனப் புதிய விதிமுறையைக் கொண்டுவரவுள்ளனர்.

இதன்மூலம் வேறெந்தவொரு அடையாள அட்டை இருந்தாலும், ஆதார் என்பது கட்டாயமாக்கப்படும்.

இதன் வழியாகவே மொத்த தரிசனமும் மேற்கொள்ளப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், மொபைல் ஆப் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பித்தாலும், அதார் எண்ணைக் குறிப்பிடுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களுக்கு விதிமுறையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

வழக்கம்போல் வெளிநாட்டுப் பக்தர்கள் தங்களது அடையாளமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.