சர்வதேசத் திரைப்பட விழாவில் பாகுலி 2..!

41
669
சர்வதேசத் திரைப்பட விழாவில் பாகுலி 2..!
Advertisement

சர்வதேசத் திரைப்பட விழாவில் பாகுலி 2..!

Advertisement

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று முதல் ஆரம்பமான 39வது சர்வதேசத் திரைப்பட விழாவில், பாகுலி 2 படம் சிறப்புத் திரையிடலாகத் திரையிடப்பட்டது.சர்வதேசத் திரைப்பட விழாவில் பாகுலி 2..!

அத்துடன் பாகுபலி படத்தின் முதல் பாகம், குல்ஷன் குரோவர் நடித்துள்ள ஹிந்திப் படமான பேட்மேன், குஜராத்தி திரைப்படமான பே யார்,

அசாமிய திரைப்படமான கொத்தநோடி, கன்னடத் திரைப்படமான யு டர்ன், பெங்காலித் திரைப்படமான எ டெத் இன் குன்ச் ஆகிய இந்தியத் திரைப்படங்கள் இந்தியப் படப் பிரிவில் திரையிடப்படுகின்றன.

புகழ் பெற்ற ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் திரையிடலாக பாகுபலி 2 திரைப்படம் திரையிடப்பட்டது இந்தியத் திரையுலகத்திற்குக் கிடைத்த பெருமை.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மாஸ்கோ சென்றுள்ளார்.

“மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாவில் இருப்பது மிகவும் உற்சாகமாக உள்ளது.

பாகுபலி 2 படத்தை முதலில் திரையிடத் தேர்வு செய்தது மிகவும் பெருமையாக உள்ளது,” என ராஜமௌலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜுன் 22ம் தேதி முதல் ஜுன் 29ம் தேதி வரை மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுகிறது.

பல சர்வதேத் திரைப்பட விழாக்களில் பாகுபலி 2 பங்கு பெறுவதன் மூலம் அந்தப் படத்திற்கான புதிய வியாபார ஏரியாக்கள் உருவாகும், மேலும் இந்தியத் திரையுலகத்திற்கும் ஒரு பெருமை கிடைக்கும்.