தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் யோகா தினம்..!

31
683
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் யோகா தினம்..!
Advertisement

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் யோகா தினம்..!

Advertisement

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் நேற்று மூன்றாவது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கல்லூரி துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி தலைமை உரையாற்றினார்.

வேளாண் மாணவர்களுக்கு பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் முக்கிய  கடமை  இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா செய்வதே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

யோகா கலை அறிவியல் பூர்வமானது என்றும், இதனை செய்வதன் மூலம் உடல் நலம், மன நலம் இரண்டையும் பெற்று மாணவர்கள் முன்னேற முடியும் என்றும் கூறினார்.

கோவை மண்டலத்தின் உலக சமுதாய சேவை மையத்தின் தலைவர் பச்சையப்பன் மற்றும் இணை இயக்குனர் ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

இதன் பிறகு, மாணவர்கள் பல்வேறு யோகா பயிற்சியை செய்தனர்.

                              

                                                                                                            

                                                                                       

விழாவிற்கு பல்கலைகழக முனைவர் ஆனந்தகுமார், வேளாண் கல்லூரி முதன்மையாளர் முனைவர் மகிமைராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உலக சமுதாய சேவை மைய யோகா ஒருங்கிணைப்பாளர் ரமா ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

முதலாமாண்டு மாணவர் அருண்குமார் நன்றியுரை வழங்கினார். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை மகிமைராஜா மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராகவன் ஆகியோர் கவனித்தனர்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119