ரஜினி தனிக்கட்சி தான் ஆரம்பிக்கிறார்: அர்ஜுன் சம்பத் திட்ட வட்டம்..!

47
629
ரஜினி தனிக்கட்சி தான் ஆரம்பிக்கிறார்: அர்ஜுன் சம்பத் திட்ட வட்டம்..!
Advertisement

ரஜினி தனிக்கட்சி தான் ஆரம்பிக்கிறார்: அர்ஜுன் சம்பத் திட்ட வட்டம்..!

Advertisement

தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கிய நாள்முதல் ரஜினி எந்த நேரத்திலும் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தைத் தொற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பலவித எதிர்பார்ப்புக்கு இடையில் திடீரென ‘காலா “படத்தைக் கையில் எடுத்துக்கொண்டார் ரஜினி.

அதனால், அவருடைய வருகை இப்போதைக்கு இல்லை என்ற தோற்றத்தைக் காட்டினாலும், அவர் உண்மையில் அரசியல் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ரஜினியைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு, ஒருமணி நேரம் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து அர்ஜுன் சம்பத்திடம் கூறியுள்ளதாவது:

”இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவருடன், நட்பில் உள்ளவன் நான். அவர், ஆன்மிகம் – அரசியல் ஈடுபாடுகொண்டவர்.

அதனால் நட்பு, ஆன்மிகம், அரசியல் இந்த மூன்றைப் பற்றிய பேச்சாக இந்தச் சந்திப்பு இருந்தது.

‘தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. எனவே, நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்’ என்ற வேண்டுகோளை அவரிடம் வைத்தேன்.

மேலும், ‘கடந்த 1967 ஆம் ஆண்டுமுதல் 2017 வரை 50 ஆண்டுக்காலம் தமிழக அரசியல் நிலை சரியில்லை’ என்ற கருத்தையும் அவரிடம் சொன்னேன்.

அது மட்டுமன்றி, ‘சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கு’ என்று நீங்கள்தான் கூறியிருந்தீர்கள்.

‘அப்படியான இந்தச் சிஸ்டத்தை மாற்ற உங்களைப் போன்ற வலிமையான தலைமை அவசியமாகிறது. இந்தச் சிஸ்டத்தை மாற்றுகிறேன் என்று பலர் கூறலாம்.

ஆனால், அதனை மாற்றக்கூடிய வலிமை யாருக்கும் இங்கு இல்லை. ஆனால், நீங்கள் நினைத்தால் அதனை மாற்ற முடியும். அதற்கான பலம் உங்களிடம் உள்ளது’ என்றேன்.

அதற்கு ரஜினி, ‘நதிநீர் இணைப்புதான் உடனடியான தீர்வு. தற்போதைக்கு இந்தக் கங்கை – காவிரித் திட்டம் என்பது உடனடியாகத் தீர்க்கக்கூடியது அல்ல.

குறைந்தபட்சம் தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும். அதில், ஏற்கெனவே கோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதில், கிருஷ்ணா நதி சென்னைவரை வந்துள்ளது.எனவே, நதிகளை இணைப்பதுதான் மிகப்பெரிய பணி.

அந்த மாதிரிச் செய்யும்போது மத்திய – மாநில அரசு இணைந்து செயல்படவேண்டும்.

அப்படியான காரியங்கள் செய்ய வேண்டும் என்றால், அரசியல் சக்தி தேவையாகிறது. அதற்கான பணியைச் செய்துவருகிறேன்;  நிச்சயமாகச் செய்வேன்’ என்றார்.

ரஜினி தமிழகத்து மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார். அவர்களும் ரஜினி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்”

தனிக்கட்சி தொடங்குவாரா..? 

கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரிடம் பேசவில்லை. ஆனால், அவர் தனிக் கட்சிதான் தொடங்குவார் என்பது என்னுடைய நிலைப்பாடு.

தேசியக் கட்சியாக இருந்தாலும் மாநிலக் கட்சியாக இருந்தாலும் அவர் போய் ஒரு கட்சியின்கீழ் வேலை செய்வதை விரும்பமாட்டார்.

அவருக்கு என்று தனிச் சிந்தனைகள், கொள்கைகள் உள்ளன. தமிழக மக்களுக்காகச் செய்வதற்கென சில யோசனைகள் வைத்துள்ளார்.

அதனை நிறைவேற்ற வேண்டும் என்றால், அவர் தனிக் கட்சிதான் தொடங்குவார் என்று நினைக்கிறேன்.

பி.ஜே.பி-யில் ரஜினி இணைகிறார் என்றோ அல்லது அந்தக் கட்சி ரஜினியின் செல்வாக்கைப் பயன்படுத்தப் பார்க்கிறது என்றோ சொல்வது எல்லாம் சரியான தகவல் இல்லை.

இயற்கையாகவே, அவர் நல்ல தேசியவாதி, அரசியல் பற்றித் தெரிந்திருக்கக் கூடியவர். அதனால் அவருடையச் செயல்களை அவரே திட்டமிட்டுச் செயல்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.