நேற்று தங்க தமிழ்செல்வன் இன்று கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி..!

37
744
நேற்று தங்க தமிழ்செல்வன் இன்று கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி..!
Advertisement

நேற்று தங்க தமிழ்செல்வன் இன்று கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி..!

Advertisement

மாட்டிறைச்சி விவகாரத்தில் அ.தி.மு.க எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்.நேற்று தங்க தமிழ்செல்வன் இன்று கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி..!

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வந்தார்.

அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள கால்நடைச் சந்தை கட்டுப்பாடு சட்டத்தை, தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் கோரின.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது.

மாட்டிறைச்சி தொடர்பாக உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே, வழக்கின் தீர்ப்புக்கு பின்னர், மக்களின் மனநிலைக்கேற்ப இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கபடும்” என்று தெரிவித்தார்.

ஆனால், முதல்வரின் பதிலில் திருப்தி இல்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தன.

மேலும், அப்போது அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். இதனால், பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

“கால்நடைச் சந்தை கட்டுப்பாடு சட்டத்துக்கு, முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று தனியரசு கூறினார்.

“இதைத்தான் உண்ண வேண்டும் எனக் கூற யாருக்கும் அதிகாரமில்லை. கால்நடைச் சந்தை கட்டுப்பாடு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது” என்று கருணாஸ் கூறினார்.