தமிழ் தொண்டர் நித்தியானந்தபாரதி..!

42
1083
தமிழ் தொண்டர் நித்தியானந்தபாரதி..!
Advertisement

தமிழ் தொண்டர் நித்தியானந்தபாரதி..!

Advertisement

நித்தியானந்தபாரதி தமிழுக்கு செய்து கொண்டிருக்கும் பணிகள்

நிறுவனத்தலைவர்,

கணபதி தமிழ்ச்சங்கம்,

பசுமைக்காப்பகம்,

திருக்குறள் பயிற்சி வகுப்பு

திருவள்ளுவர் சிலை உற்பத்தியாளர்,

கவிஞர் ,

எழுத்தாளர்,

புத்தக வெளியிட்டாளர்

என பன்முகத்தன்மை கொண்டவர்..இவரை பற்றி ஒவ்வொரு உண்மை தமிழனும் கண்டிப்பாக தெரிந்து கொள்வோண்டும்…!

அப்படி என்ன? இவர் சாதித்து விட்டார்..!

கொஞ்சம் பொறுமை இருந்தால் மட்டுமே..! படிக்கவும்..!கோவை….கனபதியை சேர்ந்தவர் நமது நவீன பாரதி, இவர் 2002 முதல் தொடர்ந்து 700 வரமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டுயிருக்கிறார்

ஆண்டுதோறும் 10,000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல், ஒரு குறளுக்கான ஓவியம் வரையும் போட்டி , கதை எழுதும் போட்டி, கவிதை எழுதும் போட்டி போன்ற போட்டிகள் நடத்தி வருகிறார்.

இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வண்ண சான்றிதழும், பரிசும், கேடயமும் தன் சொந்த செலவில் வழங்கிவருகிறார் .

இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஞாயிறு சிரவை ஆதீன பள்ளியில் போட்டி நடைபெறுகிறது.

மேலும் திருக்குறளை மக்களிடம் பரப்புரை செய்து

கொண்டிருப்பவர்கள் ,திருக்குறள்ஆய்வாளர்கள்,

திருக்குறள் வழி  நடப்பவர்கள்,

திருக்குறள் ஆர்வலர்கள் போன்றவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும்.   “திருக்குறள் பெருந்தொண்டர் விருது” “திருக்குறள் தூதர் விருது” வழங்குகிறார்

நமது தமிழ் குறளை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும் என்று நான்கு திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்.

சிரவை ஆதீனம் முருகன் கோவில் வளாகத்தில் திருவள்ளுவர் அறிவுத்திருக்கோவில் அமைத்து சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் தலைமையில் முதல் சிலை வைத்திருக்கிறார்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூ போட்டு, திருக்குறள் சொல்லி வணங்கி செல்கின்றனர் . இதை எல்லா கோவிலுக்கும் எடுத்து செல்ல இருக்கிறார். கல் சிலை 31/2 அடி இதன் விலை 4000 மட்டுமே.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நாள்தோறும் திருக்குறள் படிக்க வேண்டுமென்று அவர்களுக்கு நினைவூட்ட பள்ளிதோறும் திருவள்ளுவர் சிலை வைத்துக்கொண்டு இருக்கிறார்.

முதல் சிலை சரவன்பட்டி ரூபி பள்ளியில் நிறுவியிருக்கிறார். சிமெண்ட் சில 4 அடி உயரம், விலை 7000 மட்டுமே.

                                                  

நாள்தோறும் திருக்குறள் படிக்கவேண்டுமென்று நினைவூட்ட வீடுதோறும் திருவள்ளுவர் சிலை கொடுக்கி்றார் 11/2 அடி உடையாத காகித கூழ் சிலை, விலை 500 மட்டுமே.

எல்லா விழாக்களும் எடுத்துச்செல்ல திருவள்ளுவரை முன் நிறுத்தி நிகழ்ச்சி நடத்த ஏதுவாக 20 கிலோ எடை உள்ள 4 அடி உடையாத பைபர் சிலை செய்து கொடுக்கிறார்  விலை 15,000 மட்டுமே.

திருவள்ளுவர் நாள் அன்று 5 க்கும் மேற்பட்ட ஊர்களில் 100 க்கும் மேற்பட்ட வீதிகளில் படம் வைத்து விழா கொண்டாடுகிறார்.

மேலும் மனிதன் உயிர் வாழ மூச்சுக்காற்று வேண்டும். அந்த மூச்சுக்காற்று கொடுக்கும் மரத்தை யாரும் வெட்டாதபடி,

கோவில்தோறும் 27 நட்சரத்திற்கான மரத்தை நன்பர்கள் உடன் இனைந்து  வடவள்ளி முருகன் கோவில்.. சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபரசாமிகள் தலைமையில் நட்டு இருக்கிறார

70,000 ம் ஆண்டு பழமையான தமிழர் வரலாற்றை உலகுக்கு எடுத்து சொல்லும் ஆய்வரங்கம் ஆண்டுக்கொரு முறை இரண்டு நாள் நடக்கிறது.

ஆகழ்வாராய்ச்சி செய்த இடங்கள், பாறை ஓவியம், கல்வெட்டு, ஓலைச்சுவடி என்று தொடர்ந்து நடத்துகிறர்.

அதுபோக புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, வாழ்வியல் போன்ற தலைப்புகளில் புத்தகங்களை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்.

                               

திருமணம் போன்ற விழாவிற்கு வருகை தருபவர்களுக்கு 1000 புத்தகங்களை இவரிடம் வாங்கி திருமணத்திற்கு வருபவர்களிடம் பரிசாக கொடுக்கிறார்கள்

கவிஞரான இவர் கவிதை இலக்கிய இதழ்களில் வசந்த வாசல் கவிமாலை, இலக்கியச்சோலை, நமது உரத்த சிந்தனை போன்ற இதழ்களில் வெளி வந்து இருக்கிறது.

திருக்குறளை மையமாக வைத்து வள்ளுவமே வாழ்க்கை என்ற தலைப்பில் கௌமார அமுதம் இதழில் தொடராக எழுதி வருகிறேன். இது மட்டுமல்லாது பல இதழ்களில் என் கட்டுரை வெளிவந்திருக்கிறது.

சமுதாய பணியாக தமிழ், தமிழர், தமிழ்நாடு  வளர்ச்சிக்கு 100 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் கலந்து கொண்டுயிருக்கிறார்

இலக்கியப்பணியாக தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தையும், தமிழர் வரலாறு, தமிழக வரலாறு எளிய மக்களை சென்றடைய 300க்கும் மேற்பட்ட அரங்க கூட்டம்  தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடத்தி இருக்கிறார்

கோவை கணபதியில் இருக்கும் நூலகத்தில் வாசகர் வட்ட தலைவராக இருந்து வாசகர்களை ஊக்குவிக்கும் விதத்தில்

மாதம் ஒருமுறை புத்தக விமர்சனம், சிலப்பதிகார தொடர் வகுப்பு, புறநானூறு தொடர் வகுப்பு தொடர்ச்சியாக நடத்திக் கொண்டுயிருக்கிறார் .

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமும், மனிதன் சாகா வரம் பெற்று வாழும் சித்தர்கள் கண்டுபிடித்த சித்த மருத்துவத்தை மக்களிடம் எடுத்துச்செல்ல,

ஆண்டுக்கொரு முறை இலவச சித்த மருத்துவ முகாம் கோவை மாவட்ட சித்த மருத்துவர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்துகிறார்

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவன் வாக்குக்கேற்ப குளம், குட்டை, ஏரி போன்றவற்றை தூர்வாரி நீர் சேமிக்க மக்களிடம் துண்டறிக்கை கொடுத்து விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுயிருக்கிறார

இவருடைய குருதி வகை ஓ+( O+) இதுவரை 40க்கு மேற்பட்ட முறை குருதிக்கொடை கொடுத்து இருக்கிறார்

                                     

இதுவரையில் இவர் பெற்ற விருதுகள்

திருக்குறள் சுடர்,

திருவள்ளுவர் சிலை

திருப்பணி செம்மல்,

திருக்குறள்நெறிக்காவலர்

,தமிழ்மாருதம்,

திருக்குறள் தொண்டர்,

என 15 க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று இருக்கிறார்

இவரை வாழ்த்தி பேச

நித்தியானந்தபாரதியை வாழ்த்தி பேச உங்களுக்கு மனம் இருந்தால் தொடர்பு கொள்ள

 9842252051, 9150064141 என்று நம்மிடம் தகவல் தந்தார் கோவை ரா.சிவாபாரதி…!

தமிழ் தொண்டர் என்பதை வீட உண்மை தமிழர் நித்தியானந்தபாரதியை பற்றி மேலும் விபரம் அறிய 9894291159 என்ற கை பேசி எண்னில் ரா.சிவாபாரதியை தொடர்பு கொள்ளவும்…

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119